மே 11. 1991ல் ராஜீவ்வை கொல்ல மைசூரில் நடந்த கொலை முயற்சி: சித்தராமையா ’திடுக்’ தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

CM recalls assassination bid on Rajiv Gandhi in city
மைசூர்: ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, மைசூரில் ஒரு கொலை முயற்சி நடந்ததாக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 22ம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தீவிரவாதிகளின் சதியால் கொல்லப்பட்டார். அவரது நினைவு நாள் தீவிரவாத தடுப்பு தினமாக நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.

அன்னாரது நினைவுநாளையொட்டி, மைசூர் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.

அப்போது சித்தராமையா பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டார். அவையாவன...

மைசூரிலே கொல்ல சதி...

1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக மைசூரிலேயே அவரை கொல்ல சதி நடந்தது.

தேர்தல் பிரச்சாரம்...

பாராளுமன்ற தேர்தலுக்காக மைசூரில் அவர் பிரசாரம் செய்ய வந்தார். லலித் மஹால் பகுதியில் அவரது கார் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத வேளையில் ஒரு வயதான பெண், திடீரென்று ராஜீவ் காந்தியின் காருக்கு குறுக்கே பாய்ந்தார்.

கார் மோதி கொல்ல சதி...

ராஜீவின் கார் சட்டென்று நின்றதால், அவரது காருக்கு பின்னால் வந்த கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் ராஜீவ் காந்தியை கொல்வதற்காக நடந்த சதி என்பது பின்னர் தெரிய வந்தது.

இளைய தலைவர் மறைந்தார்...

இது நடந்த 10 நாட்களுக்கு பின்னர் அவர் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி ஒரு இளைய தலைவரை இழந்துவிட்டது.

முன்னோட்டம்...

அவரது மறைவுக்கு பிறகுதான் மைசூர் சம்பவம், ராஜீவ் படுகொலைக்கான முன்னோட்டம் என்பது தெரிய வந்தது என இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+