போலி நகைகள்... போலி பெயர்கள்... திருப்பூர் கூட்டுறவு சங்க செயலாளர் கைது!
திருப்பூர்: கொடுவாயில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த கூட்டுறவு சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், கொடுவாயில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் இறுதியில் நிதியாண்டு கணக்கு தணிக்கை நடைபெறும். அது போல, கடந்த ஆண்டும் நடைபெற்றது.
அப்போது, வங்கி லாக்கரில் போலி நகைகள் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வங்கி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, சுமார் 200 பவுன் போலி நகைகளுக்கு, போலியான நபர்கள் பெயரில், கடன் வழங்கியது தெரிய வந்தது.
இதனையடுத்து, வங்கி உயர் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், கூட்டுறவு சங்க செயலாளர், பாலசுப்ரமணியம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த புகாரின் பேரில், விரைவில், கொடுவாயில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் கைது செய்யவும் வாயப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications