நெல்லையில் சிசிடிவி கேமரா பொருத்துவதில் சிக்கல்? காலக்கெடு நீட்டிக்க கோரிக்கை

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செயின்பறிப்பு, பிக்பக்கெட், போன்ற குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த அரசு ஆணையிட்டுள்ளது. பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் வரவேற்பு அறைகள் மற்றும் உள் அறைகளில் பொதுமக்கள் நடமாட்டங்களை கண்காணிக்க ஜூன் மாதம் இரண்டாம் வாரத்திற்குள் கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு உத்தரவின் பேரில் வங்கிகள், நகை கடைகள், ஓட்டல்கள், மேல்நிலைப்பள்ளிகள், மருத்துவமனைகள், நட்சத்திர ஓட்டல்கள், தியேட்டர்கள், சந்தைகள், புனித தலங்கள், பஸ், ரயில் நிலையங்கள், பொது நூலகங்கள் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா கண்டிப்பாக பொருத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. திருட்டு சம்பவங்களை தடுக்கவும், வெடிகுண்டு, தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்களை தடுத்து உண்மை குற்றவாளிகளை அடையாளம் காணவும் சிசிடிவி கேமரா அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விதித்துள்ள காலகெடுவுக்கு குறுகிய காலமே இருப்பதாலும், மேலும் பல நிறுவனங்களில் இதற்கான பெரும் நிதி இல்லாததாலும் சிசிடிவி பொருத்த தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் கால கெடுவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரி வருகின்றன.












Click it and Unblock the Notifications