கேபிள் டிவி ஆபரேடர் கொலை… மனைவி உள்ளிட்ட மூவர் கைது
சென்னை: சென்னை அம்பத்தூரில் கேபிள் டிவி ஆபரேடர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி, மாமனார், மைத்துனர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்பத்தூர் பானு நகரில் வசித்து வந்தவர் ஸ்ரீதர். இவருக்கு மனோன்மணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் திருமுல்லை வாயில் பகுதியில் கேபிள் டிவி ஆபரேடராக உள்ளார்.
கடந்த 13-ஆம் தேதி காலை அம்பத்தூரில் தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணை செய்த போலீசார் அவரது மனைவி மனோன்மணி, அவரது தந்தை நாகசுந்தரம் மற்றும் ராஜா ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.
ஸ்ரீதருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததுடன், தினமும் மனைவி மனோன்மணியத்தை கொடுமை செய்ததாகவும், இதனால், ஆத்திரமடைந்த மனோன்மணி தனது தந்தை, தம்பியுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக சுதாகர் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications