ஐபிஎல் சூதாட்டம்.. சென்னை ஹோட்டல் உரிமையாளர் சிக்குகிறார்!
மும்பை: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு ஹோட்டல் உரிமையாளரின் பெயர் அடிபட தொடங்கியுள்ளதாம். அவருக்கும், பிக்ஸிங்குக்கும் உள்ள தொடர்புகள் குறித்து மும்பை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனராம்.
இந்த ஹோட்டல் அதிபரின் பெயர் விக்டர் என்று கூறப்படுகிறது. இவரை நடிகர் விண்டு சிங்தான் சூதாட்ட புக்கிகளிடம் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தொடர்புடைய குருநாத் மெய்யப்பனிடமும் அறிமுகப்படுத்தி வைத்தாராம் சிங்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றின் கிளை ஹோட்டல் இந்த விக்டரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதாம். புக்கிகள் சந்திரேஷ் ஜெயின் என்கிற ஜூபிடர், சஞ்சய், பவான் ஆகியோருடன் விக்டருக்கு நெருங்கிய நட்பு, தொடர்பு இருக்கிறதாம்.
போலீஸ் விசாரணையின்போது இந்தத் தகவல்களை விண்டு தெரிவித்தாராம். மேலும், திரையுலகைச் சேர்ந்த பலரையும் சூதாட்ட களத்திற்குள் விக்டர்தான் கொண்டு வந்ததாகவும் விண்டு கூறியுள்ளார்.
தற்போது விக்டர் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. விரைவில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகளை போலீஸார் முடுக்கி விடலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே, சென்னையிலேயே மிகப் பெரிய சூதாடி விக்டர்தான் என்ற புதிய தகவலும் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. இவர் ஐபிஎல் போட்டிகளில் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை பெட் கட்டியிருப்பதாகவும் போலீஸார் நம்புகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications