ஈரோடு அருகே விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலர் கைது
ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் வி.ஏ.ஓ.வை மிரட்டிய அதிமுக கவுன்சிலர் சக்திவேல் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் யூனியனுக்கு உட்பட்ட சங்கராபாளையம் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வருபவர் திரவியக் கண்ணன். சங்கராபாளையம் 4வது வார்டு அதிமுக கவுன்சிலர் சக்திவேல். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை பெற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வி.ஏ.ஓ. திரவியக் கண்ணனிடம் கொடுத்துள்ளார்.
மனு கொடுத்துள்ளவர் வீட்டில் ஏற்கனவே ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே இவருக்கு சான்று வழங்க முடியாது என்று திரவியக் கண்ணன் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் கண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து வி.ஏ.ஓ. வெள்ளிதிருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications