வடகிழக்கு மாநிலம் பற்றி ராகுலுக்கு போதுமான அறிவு இல்லை: அசாம் கன பரிசத்
குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் 3 முறை ஆட்சி அமைத்த அசாம் கன பரிசத் அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று முத்திரை குத்தி ராகுல் கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் அவருக்கு நாட்டின் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி போதுமான அறிவு இல்லை என்பது அம்பலமாகியுள்ளது என அந்த கட்சி விமர்சித்திருக்கிறது..
விக்கிலீக்ஸ்
விக்கிலீக்ஸ் அண்மையில் ஒரு தகவலை அம்பலப்படுத்தியது.. 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அசாம் கன பரிசத் பற்றி கருத்து தெரிவித்திருந்த ராகுல் காந்தி, அசாமில் பிரிவினைவாத இயக்கமான அசாம் கன பரிசத்தை இந்தியாவும் ஹமாஸை அமெரிக்காவும் ஆட்சி அமைக்க அனுமதித்திருக்கிறது என்று கூறியிருந்திருக்கிறார்.
கண்டனம்
இதற்கு அசாம் கன பரிசத் அமைப்பின் செயலாளர் துர்கா தாஸ் போரோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசாமில் 6 ஆண்டு காலம் அமைதி வழியிலான போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்தனர். இதன் விளைவாகவே 1985 ஆம் ஆண்டு ராகுலின் தந்தை ராஜிவ் காந்தியால் அசாம் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1986ஆம் ஆண்டு முதல் 3 முறை அசாமில் அசாம் கன பரிசத் ஆட்சியையும் அமைத்தது. இந்த நிலையில் தீவிரவாத பிரிவினைவாத இயக்கத்தினருடன் அசாம் கனபரிசத்தை ராகுல் ஒப்பிட்டு பேசியிருப்பது எங்களை அவமதிப்பதாகவே கருதுகிறோம்.
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிற ராகுல் காந்தியின் இத்தகைய கருத்துகள் மூலம் அவருக்கு அசாம் பற்றியோ நாட்டின் வடகிழக்கு மாநிலம் பற்றியோ போதுமான அறிவு இல்லை என்பதே வெளிப்படுத்துகிறது என சாடியுள்ளார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications