அசாமில் 9 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம்!
கவுகாத்தி; அசாம் மாநிலத்தின் 27 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிஷா, ஜார்க்கண்ட், பீகார், மேற்குவங்கம், மத்திய பிரதேசம் என விரிந்து கிடக்கும் மாவோயிஸ்டுகள் வடகிழக்கு மாநிலங்களில் வேரூன்றி வருவதாக அவ்வப்போது மத்திய அரசு தெரிவித்து வந்தது. கடந்த வாரம் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களை இலக்கு வைத்து மிகப் பெரும் தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தினர். இதில் 27 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி. சுக்லா உள்ளிட்ட 36 பேர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது இந்த தாக்குதல்.
இந்த நிலையில் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநில அரசு திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறது. அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 27 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட ஆதிக்கம் நிறைந்த பகுதியாக இருக்கிறது .. இதனால் இந்த 9 மாவட்டங்களையும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறது.
அதாவது அசாமின் தின்சுகியா, திப்ரூகர், தேமாஜி, லக்மிபூர், கோலாகாட், சிவசாகர், கோல்பார, சச்சார், கரீம்கஞ்ச் ஆகிய மாவட்டங்களை மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்பது அசாம் அரசின் கோரிக்கை. இந்த 9 மாவட்டங்களில் மொத்தம் 103 போலீஸ் நிலையங்களில் 35 நிலையங்கள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அசாம் அரசு குறிப்பிட்டிருக்கிறது. இந்த 9 மாவட்டங்களுமே அருணாசலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களை ஒட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 9 மாவட்டங்களும் மத்திய அரசால் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆண்டு தோறும் ரூ10 கோடி நிதியை மத்திய அரசு வழங்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications