ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு நாளை வரும் ஜெயலலிதா
திருச்சி: குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சுக்கிரனின் அம்சமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க முதல்வர் ஜெயலலிதா நாளை மாலை திருச்சி வருகிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு ஜெயலலிதா வருவதையொட்டி கோவிலின் சுற்றுப்புற பகுதிகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து கோவில் வட்டாரத்தில் கேட்டபோது, எண் கணிதப்படி நேற்று (28ம் தேதி) குருப்பெயர்ச்சி நடந்துள்ளது. பஞ்சாங்கப்படி நாளை தான் (30-ம் தேதி) குருப்பெயர்ச்சி நடக்கிறது. குருப்பெயர்ச்சியும், குருவாரம் என்று அழைக்கப்படும் வியாழக்கிழமையும் ஒரே நாளில் வருகிறது. இந்த குருப்பெயர்ச்சியால் சிம்மராசி, மகம் நட்சத்திரத்திற்கு சிறப்பான யோகங்கள் கூடி வருவதாலும், அன்றைய தினம் சுக்கிரனின் அம்சமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்தால் சகல நன்மைகளும் சிறப்புகளும் கிடைக்கும் என்பதாலும் முதல்வர் ஜெயலலிதா நாளை ரங்கநாதரை தரிசனம் செய்ய வருகை தர உள்ளார் என்று கூறினர்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் பிற்பகலில் திருச்சி வரும் அவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கோவிலுக்கு செல்கிறார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் மற்றும் கலெக்டர் வரவேற்கிறார்கள். முதல்வர் வருகையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று சென்னையில் இருந்து முதல்வரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்துகிறார்கள்.
ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் வருகிற 3ம் தேதி நடைபெறும் அரசு விழாவிலும் கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications