இதோ இன்னும் ஒரு கள்ளக்காதல் கதை.. மனைவி நகையை விற்று கள்ளக்காதலியுடன் ஜாலி
கிருஷ்ணகிரி: இதோ இன்னும் ஒரு கள்ளக்காதல் கதை. கிருஷ்ணகிரி அருகே மனைவியின் நகையை விற்று அந்தப் பணத்தை வைத்து கள்ளக்காதலியுடன் ஜாலியாக இருந்த லாரி டிரைவரைப் போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டிரெட்டிபட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் மோகன் ராஜ். 42 வயதான இவர் ஒரு லாரி டிரைவர். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் மோகன் ராஜ். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா கணவரை விட்டுப் பிரிந்து போய் விட்டார். தனியாக வசித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு மனைவி வீட்டுக்குப் போன மோகன்ராஜ், நான் திருந்தி விட்டேன். இனிமேல் சாகும் வரை நீ மட்டுமே என்று டயலாக் அடித்தார். இதை நம்பினார் மஞ்சுளா. இதையடுத்து அடுத்த பிட்டைப் போட்டார் மோகன்ராஜ்.
சொந்தமாக லாரி வாங்க முடிவு செய்துள்ளேன். பணம் வேண்டும். உனது நகைகளை கொடு என்று கேட்டுள்ளார். மஞ்சுளாவும், சந்தோஷத்துடன் தனது 20 பவுன் நகைகளை எடுத்து கணவரிடம் கொடுத்தார்.
நகைகளை வாங்கிச் சென்றமோகன் ராஜ் அதை விற்று விட்டார். பின்னர் அந்தப் பணத்தில் லாரி வாங்காமல், தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக பொழுதைக் கழிக்கஆரம்பித்தார். தாறுமாறாக செலவு செய்து கள்ளக்காதலியுடன் உற்சாகமாக இருந்துள்ளார்.
இது மஞ்சுளாவுக்குத் தெரிய வந்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். மோகன்ராஜிடம் போய்க் கேட்டபோது அவர் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினாராம்.
இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று பொங்கிய மஞ்சுளா, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் புகாரைப் பதிவு செய்து மோகன்ராஜை தூக்கி தற்போது சிறையி்ல் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications