வருடத்திற்கு 22 மணி நேரத்தை சேமிக்க உதவும் ‘ஸ்மார்ட்’போன்கள்...
வாஷிங்டன்: ஆண்டுதோறும் ஆயுளில் 22 மணி நேரங்கள் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதால் சேமிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.
மொபைல் போன் சந்தையில், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், இதில் உள்ள பயன்பாட்டு வசதிகள் மூலம் நேரமும் மிச்சப்படுகிறதாம்.
உலக அளவில், தற்போது நூற்றி நாற்பது கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சும்மாவே, ஸ்மார்ட் போனை தூக்கி அனைவரும் கொண்டாடி வருகையில்,"ஸ்மார்ட் போன்' பயன்படுத்துவதால்,ஓராண்டில், 22 நாட்கள் சேமிக்கப்படுகிறது என, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாம்.

ஐந்தாவது இடத்தில் இந்தியா...
ஸ்மார்ட் போன் பயன் படுத்துவதில், உலக அளவில் இந்தியா, ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இதன் வளர்ச்சி தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. 2012 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில், இதுவரை 4 கோடியே 40 லட்சம் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

அமெரிக்க ஆய்வு...
அமெரிக்காவின் வர்த்தக ஆராய்ச்சி நிறுவனமான, ஹாரிஸ் இன்டர்ஆக்டிவ், ஸ்மார்ட்போன் தொடர்பாக, 2,120 பேரிடம் ஆய்வு நடத்தியது. இதில், 97 சதவீதம் பேர் தங்களது முக்கிய பயன்பாட்டிற்கு ஸ்மார்ட் போனையை பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தனர்.

சீனா, அமெரிக்காவை விட அதிகமாம்...
பொதுவாக ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் முதல் இடத்தில் பிரேசில், அடுத்து ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த மொபைல் போன்களில் 5% என்ற அளவில் ஸ்மார்ட் போன்கள் உள்ளதாம். வருடந்தோரும் இது 57% என்ற அளவில் உயர்ந்து வருகிறதாம். இது சீனா மற்றும் அமெரிக்காவினைக் காட்டிலும் அதிகமாகும்.

இமெயில் செக்கிங்...
மெயில் செக்கிங்காக அதிக அளவில், ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்கள், விளையாட்டுக்கள், இணையதள தகவல்கள், வானிலை நிலவரம், வரைபடங்கள், ஜி.பி.எஸ்., காலண்டர் மற்றும் கடிகாரம் போன்றவைகளும் அடுத்த கட்டம் கட்டி நிற்கின்றன

நேரம் மிச்சம்...
தங்களுக்கு ஒரு நாளில் 88 நிமிடம் அதிக அளவில் இ மெயில் பயன்படுத்தப்படுவதால் சேமிக்கப்படுவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும் எழுத்து வடிவில் அனுப்பப்படும் இமெயில் மூலம் மட்டும் நாள் ஒன்றுக்கு 53 நிமிடம் சேமிக்கப்படுகிறதாம். பணியாற்றுபவர்களில் 25 சதவீதம் பேர் தங்களது பணி நிமித்த இமெயிலுக்காக பயன் படுத்துகின்றனராம்.

நவீன தொழில்நுட்பமே காரணம்...
இந்த ஆய்வை மேற்கொண்ட கில் பவுன் நிக் கூறும்போது,"மொபைல் போன்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், பணியிடம் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு இவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் 82 சதவீதம் பேர் அதில் இடம் பெற்றுள்ள எல்லா விதமான அம்சங்களையும் பயன்படுத்துவதில்லையாக்கும்"என்றார்.












Click it and Unblock the Notifications