அடுத்து 15 பேரை கொல்லப் போவதாக போவதாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு
ராய்ப்பூர்: நாடே அதிரும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் மேலும் 15 பேரை படுகொலை செய்யப் போவதாக அறிவித்திருப்பதால் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் தர்பா பள்ளத்தாக்கு பகுதியில் அதிரடித் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 28 பேரை படுகொலை செய்தனர். இந்த நிலையில் தர்பா பிரதேச மாவோயிஸ்டு அமைப்பின் சார்பில் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், " சல்வா ஜூதும் அமைப்பைச் சேர்ந்த 15 செயற்பாட்டாளர்கள் மற்றும் காவல்துறையினரை நாங்கள் தண்டிப்போம். உங்களது முழு பாதுகாப்புப் படையைக் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாலும் அவர்களை உங்களால் பாதுகாக்க முடியாது" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த 15 பேரின் பெயரையும் கூட மாவோயிஸ்டுகள் பகிரங்கப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் பஸ்தார் பிரதேசத்தில் இருந்து சி.ஆர்.பி.எப். படை விலக்கிக் கொள்ள வேண்டும், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்த வேண்டும், பசுமை வேட்டை எனும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்த வேண்டும், விகாஸ் யாத்திரை அல்லது பரிவர்த்தன் யாத்திரை என்ற பெயரில் பேரணிகளை நடத்தக் கூடாது, சிறையில் உள்ள மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அந்த கடிதத்தில் மாவோயிஸ்டுகள் முன்வைத்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளின் இந்த புதிய மிரட்டல் கடிதம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications