துப்பட்டா போடலையா, போ போ: ஆதார் கார்டுக்கு போட்டோ எடுக்க வந்த பெண்ணை விரட்டிய அதிகாரிகள்

சென்னையில் ஆதார் அட்டைகள் வழங்கும் மையத்திற்கு லாவண்யா மோகன் என்ற பெண் நேற்று சென்றுள்ளார். அவர் துப்பட்டா போடாமல் சென்றதால் அதிகாரிகள் அவரை புகைப்படம் எடுக்க மறுத்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து லாவண்யா மோகன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்க 1 மணிநேரம் காத்திருந்தேன். ஆனால் நான் துப்பட்டா போடவில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். உள்ளூர் அதிகாரிகள் அவர்களாக சில விதிமுறைகளை வைத்துள்ளனர். இதில் கோபப்பட என்ன உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த ட்வீட்டிற்கு பிறகு துப்பட்டா, ஆதார் கார்டு ஆகியவை தான் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகள் ஆகும்.
இது குறித்து அதிகாரி எம்.ஆர்.வி. கிருஷ்ணா ராவ் கூறுகையில்,
ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க இந்த உடை தான் அணிய வேண்டும் என்றில்லை. முன்பு தான் சட்டையில்லாதவர்களும், காலர் இல்லாமல் சட்டை போட்டு வருபவர்களும் புகைப்படம் எடுக்கப்பட மாட்டார்கள் என்ற விதி இருந்தது. ஆனால் தற்போது ஆடை குறித்த எந்த விதிமுறையும் இல்லை. சில இடங்களில் புகார்கள் வருகின்றது. காஞ்சீபுரத்தில் உள்ள சில பிராமணர்கள் எங்களை தொடர்பு கொண்டு சட்டை இல்லாமல் புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டனர். அதன்படி அனுமதியும் வழங்கப்பட்டது என்றார்.
லாவண்யாவின் ட்வீட்டைப் பார்த்து ரமேஷ் ஸ்ரீவாட்ஸ் என்பவர், டியர் நந்தன், எனக்கு ஆதார் அட்டை வேண்டும். ஆனால் என்னிடம் துப்பட்டா இல்லை. நான் ஒரு துண்டை பயன்படுத்தலாமா? தாழ்மையுள்ள ஸ்ரீசாந்த் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மற்றொருவரோ, ஆதார் அட்டைக்கு துப்பட்டா! இந்தியா மற்றும் இந்திய ஜனநாயகத்தில் தாலிபான் கொள்கைகளை புகுத்துவதின் துவக்கம் இது தான் என்று ட்வீட் செய்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications