பாகிஸ்தானுக்கு 15 பில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க சவூதி முடிவு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் எரிசக்தி துறை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் கடும் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் கூடுதலாக 15 மில்லியன் டாலர் கடனுதவியை அளிக்க சவூதி அரேபியா முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், 1998ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்திய போது சர்வதேச தடைகளை எதிர்கொண்ட நிலையில் பாகிஸ்தான் சவூதியிடம் இருந்து 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் இறக்குமதி செய்தது. அப்போது நவாஸ் ஷெரீப் ஆட்சியில் இருந்தார். இப்போது நவாஸ் ஷெரீப் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் சவூதி அரேபியா ரூ15 பில்லியன் டாலர் கடன் உதவியை செய்ய முன்வந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
சவூதி மன்னர் குடுமத்துக்கு நவாஸ் ஷெரீப் மிக நெருக்கமானவர் என்பதுடன் கடந்த ஆசிப் அலி சர்தாரி ஆட்சிக் காலத்தில் எத்தனையோ உதவிகளை பாகிஸ்தான் கோரிய போது அதை சவூதி நிராகரித்திருந்தது என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தனிப் பெரும் கட்சியாக நவாஸ் ஷெரீப்பின் கட்சி வெற்றி பெற்ற உடனே சவூதி அரேபிய தூதர் எண்ணெய் இறக்குமதி உதவியை அறிவித்திருந்தார். நாளொன்றுக்கு 1 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் 15 ஆயிரம் டன் பர்னேஸ் ஆயில் சவூதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் எதிர்பார்ப்பு.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications