பிசிசிஐ 5 துணைத் தலைவர்கள் இன்று ராஜினாமா?: அருண் ஜேட்லி சூசகம்!

சீனிவாசனுக்கு எதிராக பிசிசிஐயின் பொருளாளர் அஜய் ஷிர்கே, செயலர் ஜக்தாலே ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் பிசிசிஐயின் துணைத் தலைவர்களான அருண் ஜேட்லி, ஷிவ்லால் யாதவ், சிட்ரக் மித்ரா, நிரஞ்சன் ஷா மற்றும் சுதிர் தபிர் ஆகியோர் இன்று ராஜினாமா செய்யப் போவதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சிட்ரக் மித்ரா தாம் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று மறுத்திருக்கிறார். அதே நேரத்தில் சுதிர் தபிர் கண்டிப்பாகா ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் அருண் ஜேட்லியிடம் இரண்டு பிசிசிஐ நிர்வாகிகள் நேற்று ராஜினாமா செய்துள்ளது பற்றி கேள்வி கேட்டதற்கு, ஆமாம்.. 2 நிர்வாகிகள் ராஜினாமா செய்திருக்கின்றனர்..வேறு சில நிர்வாகிகளும் ராஜினாமா செய்யப் போவதாக கூறப்படுகிறது.. பொறுத்திருங்கள்.. இன்று முக்கியமான செய்தி உங்களுக்குக் கிடைக்கும் என்று சூசகமான பதிலைக் கூறினார்.
பிசிசிஐயின் 5 துணைத் தலைவர்களும் இன்று ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டால் நிச்சயமாக வேறுவழியின்றி சீனிவாசன் தமது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என்பதைத்தான் அருண் ஜேட்லி மறைமுகமாக குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications