இந்தியாவில் முதன்முறையாக நீரில் மிதந்து செல்லும் விமானம்: கேரளாவில் அறிமுகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் நீரில் மிதந்து செல்லும் விமான சேவையை அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி துவக்கி வைத்தார்.
இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் இடம் கேரளா. கேரளா சுற்றுலாத் தலங்களுக்கு பஞ்சமில்லாத பகுதி. இயற்கை அன்னை அளித்த கொடையை முறையாக பாதுகாத்து அம்மாநிலத்தை மேம்படுத்துவதில் அரசும் சரி, அம்மாநில மக்களும் சரி மிகவும் ஆர்வத்தோடு, பாகுபாடின்றி அரசியல் மோதல் இன்றி செயல்பட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆழப்புழை வரை கடல் உள்ளது. அதில் ஆழப்புழையில் மிகவும் புகழ் பெறற படகு வீடுகள், படகு போக்குவரத்துக்கள் நடைபெறுவது வழக்கம். படகு போக்குவரத்திற்கு அடுத்தப்படியாக தற்போது கொல்லம்-ஆழப்புழை இடையே தண்ணீரில் செல்லும் விமானத்தை நேற்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக அம்மாநில அரசு இயக்கி வருகிறது.

சோதனை ஓட்டம்
நீரில் மிதந்து செல்லும் விமானத்தின் சோதனை ஓட்டம் கொல்லம்- ஆழப்புழை இடையே கடந்த நான்கு நாட்களாக தீவிரமாக நடைபெற்றது.

200 அடி உயரம் வரை பறக்கும்
8.6 மீட்டர் நீளமும், 2.8 மீட்டர் உயரமும் கொண்ட இந்த விமானம் 280 கிமீ வேகத்தில் 200 அடி உயரம் வரை பறக்கும் தன்மை கொண்டது.

6 பேர் பயணம் செய்யலாம்
இந்த விமானத்தில் பைலட் உள்பட 6 பேர் பயணம் செய்ய முடியும்.

10 நிமிடத்தில் சென்றுவிடலாம்
கொல்லத்தில் இருந்து புறப்படும் விமானம் (தண்ணீரில் 200 மீட்டர் ஓடி) ஆழப்புழைக்கு 10 நிமிடத்தில் செல்கிறது.

முதல்வர் துவங்கி வைத்தார்
கேரள முதல்வர் உம்மன் சாண்டி இந்த விமான சேவையை கொல்லத்தில் நேற்று மாலை தொடங்கி வைத்தார்.

மாலத்தீவுக்கும் விரிவாக்கம்
வரும் காலங்களில் மாலத்தீவுக்கும் இந்த சேவை விரிவுபடுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

அன்ன பறவை தான் முன்னோடி
கொல்லம் அஷ்டமுட்டி கயலில் இருந்து ஆழப்புழை பள்ள மடைகயல் வரை நீரின் மேலும், இயற்கை எழில் கொஞ்சும் பாதைகள் வழியாக இந்த விமானம் செல்கிறது. கைரளி ஏவிஎஸ் தெஸ்னா 206 வகையைச் சேர்ந்த இந்த நீர் விமானம் அன்ன பறவையை மையாக வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்து ஏற்பட்டால்?
இந்த நீர் விமான பயணத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதும், ஆழப்புழை, கொல்லம் கயல்களில் சுற்றுலா படகுகள் செல்லும் போதும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதாக அப்பகுதி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கேரள மக்கள் பாராட்டு
கேரள சுற்றுலாத்துறையின் இந்த முயற்சிக்கு அம்மாநில மக்கள் மட்டும் இன்றி சுற்றுலாவை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications