டெல்லியில் வாக்கிங் சென்ற இளம்பெண் கடத்தி ஓடும் காரில் கற்பழிப்பு: 3 பேர் கைது
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் இரவு நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்ற இளம் பெண் 3 பேரால் காரில் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டுள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட பிறகு நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது அவரை 3 பேர் சேர்ந்து கடத்தி ஓடும் காரில் வைத்து கற்பழித்தனர். அதன் பிறகு அவரை நேற்று அதிகாலை அவரது வீட்டுக்கு அருகே தள்ளிவிட்டுச் சென்றனர். இதையடுத்து அவர் நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.
அவர்கள் உடனே போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அன்வர்(30), சந்தீப்(32) மற்றும் அனீஷ்(35) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.
தன்னை கற்பழித்தவர்கள் தனக்கு யார் என்றே தெரியாது என்று அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் கற்பழிக்கப்பட்டது உறுதியானது.












Click it and Unblock the Notifications