பேஸ்புக்குல அப்பா, மகனுக்கு வாழ்த்து சொல்றது தப்பாங்க...: புடுச்சு ஜெயில்ல போட்டுட்டாங்க
லண்டன்:
இங்கிலாந்தில், மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்தை பேஸ்புக்கில் சொன்ன அவனது தந்தை, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இங்கிலாந்தில் வசித்து வருபவர் கார்ரி ஜான்சன்(46). இவர் சுமார் 8 வருடங்களுக்கு முன், தனது மனைவியை விவாகரத்து செய்தார்.அப்போது, அவர் தனது இரண்டு மகன்களையும் எதிர்காலத்தில் எக்காரணத்தைக் கொண்டும், குறிப்பாக அவர்களின் திருமண நிச்சயதார்த்ததின்போதோ, திருமணத்தின்போதோ அல்லது மற்ற எதற்காகவுமோ வாழ்த்தக்கூடாது என்ற உத்தரவு போடப்பட்டது. இந்த அறிவிப்பு உள்ளூர் பத்திரிகையிலும் வந்தது. இது அவரது வாழ்நாள் முழுவதற்குமான தடை என்று குறிப்பிடப்ப்பட்டிருந்தது.
இந்நிலையில், கார்ரி தடையை மீறி, தன் மகனுடைய 21வது பிறந்தநாளுக்கு பேஸ்புக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து அறிவித்தார். அறிவிக்கப் பட்டிருந்த தடையை மீறி, வாழ்த்து தெரிவித்த குற்றத்திற்காக கார்ரி தற்போது கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், கார்ரி முறையாக கைது செய்யப்படவில்லையாம். இதுவரை அவர் சார்பாக வாதிட எந்த வழக்கறிஞரும் நியமிக்கப்படவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த கார்ரியின் மகனான சாம், ‘என்னுடைய தந்தை நல்லவர் அவர் எப்போதுமே காவல்துறையினரிடம் பிரச்சினை செய்ததில்லை, எனவே அவரை குற்றவாளிபோல் நடத்துவது தவறு' என தெரிவித்துள்ளார்.
மேஎலும், ‘இந்தத் தீர்ப்பு கொடுமையானதாகவும், விமர்சிக்கத்தக்க விதத்தில் இருப்பதாகவும் இதுபோன்ற விமர்சிக்கக்கூடிய நடைமுறைகள் தொடர்ந்து நீடித்திருந்தால் குடும்ப உற்வுகள் சிதைந்து விடும் எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications