For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபிஎல் சூதாட்ட நிழலில் தன் முந்தைய ஊழல்களை காங்கிரஸ் மறைக்கப்பார்க்கிறது: பாஜக குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

Rajiv Pratap Rudy
டெல்லி: பரபரப்பான ஐ.பி.எல். சூதாட்டத்தை முன்னிறுத்துவதன் மூலம் தனது மற்ற தேசிய ஊழலை மறைக்க காங்கிரஸ் முயற்சி செய்வதாக பாரதீய ஜனதா பொதுச் செயலாளர் ராஜீவ் பிரதாப் ரூடி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அம்பல்மான 2ஜி அலைவரிசை ஊழல், நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல், காமன்வெல்த் ஊழல், ரெயில்வே முறைகேடு என பல ஊழல்களால் மத்ஹ்டியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஆட்டம் கண்டுள்ள நிலையில், அந்த ஊழல் வரிசையில் தற்போது தனியார் அமைப்பான ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்ட சர்ச்சையும் சேர்ந்து கொண்டது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ள இந்த ஐபிஎல் சூதாட்டம் குறித்து, பாரதீய ஜனதா பொதுச் செயலாளர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்த கருத்துக்களாவது, 'ஐ.பி.எல். சூதாட்டம் என்பது தனி ஒருவர் அல்லது தனி ஒரு அமைப்பின் ஊழலாகவே நான் கருதுகிறேன். அப்படியிருக்க, இந்த விவகாரம் குறித்து ஆராயப்படும் என்று அரசு கூறுகிறது.

இந்த ஐ.பி.எல். ஊழலை முன்னிறுத்தி, காங்கிரஸ் தலமையிலான அரசு, தான் ஈடுபட்டுள்ள வானாளாவிய தேசிய ஊழலை மறைக்க முயற்சி செய்கிறது. அரசின் ஊழலானது கிரிக்கெட் ஊழலுக்கு இணையானதாக இருக்கமுடியுமா என்று எனக்கு தோன்றவில்லை.

தனியாருக்கு சொந்தமான இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் மூலம் மோசடி நடந்து இருக்கிறது. இதனால் கிரிக்கெட்டையோ அல்லது விளையாட்டை விரும்புவோரையோ ஏமாற்ற முடியாது. அரசு இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ராஜீவ் பிரதாப் தெரிவித்தார்.

English summary
Terming the spot-fixing scandal as "deplorable", BJP on Monday wondered whether attempts have been made to shadow the "astronomical" corruption of the UPA government using the ongoing IPL controversy where only individuals and private entities are involved.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X