கான்ட்ராக்டர் வீட்டில் புகுந்த திருடர்கள்.. 110 நகை கொள்ளை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வீடு புகுந்த திருடர்கள், அங்கிருந்த 110 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியின் தென் பகுதியை சேர்ந்தவர் சீலன். கட்டிட கான்ட்ராக்டரான இவரது மனைவி பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2ம் தேதி சீலன் தனது மகனை திருப்பூரிலுள்ள தனியார் பள்ளியில் சேர்ப்பதற்காக குடும்பத்தினருடன் திருப்பூர் சென்றார்.
இன்று காலை திருப்பூரில் இருந்து தூத்துக்குடி வந்த சீலன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி போடப்பட்டு இருந்ததுடன், பீரோவில் இருந்த 110பவுன் தங்க நகை மற்றும் 20ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
கொள்ளை போன தங்கநகைகளின் மதிப்பு 20லட்ச ரூபாய் ஆகும்.
தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். துப்பறியும் மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
கொள்ளை தொடர்பாக வீட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது அவர் தகவல் சொல்வதற்கு மறுத்துவிட்டார். தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் சமீபகாலமாக அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்கள் மாநகர மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications