முதல்வர்கள் மாநாடு: நிதீஷ் குமாரை தவிர்த்த நரேந்திர மோடி!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் முக்கியக் கட்சியாகும்.
வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார். இதற்கு, நிதீஷ் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுபவர், மதச்சார்பற்றவராகத்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார். இதனால் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் இடையே கசப்புணர்வு நிலவி வருகிறது.
இந்நிலையில் நக்ஸல்களை ஒடுக்குவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று காலை வந்தார் நரேந்திர மோடி. அப்போது சட்டீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங்குடன் நிதீஷ் குமார் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால், அந்த இடத்தில் நிற்காமல் சென்று சென்றுவிட்டார் மோடி. நிதீஷ் குமாரைத் தவிர்க்கவே அவர் இவ்வாறு செய்ததாகத் தெரிகிறது.
வழக்கமாக முதல்வர்கள் கூட்டத்தில் கட்சி வேறுபாடு பார்க்காமல் அனைத்து முதல்வர்களையும் தானே அவர்களது இருக்கைக்கே சென்று சந்திக்கும் வழக்கம் கொண்டவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக கூட்டணி உடையும் என்கிறது காங்கிரஸ்:
இந் நிலையில் நரேந்திர மோடி மற்றும் நிதீஷ் குமாரும் பரஸ்பரம் சந்தித்துக் கொள்ளாததால் தேசிய ஜனநாயக கூட்டணி விரைவில் உடையும் வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஹரீஸ் ராவத் கூறுகையில்,
கூட்டணி சார்பில் பிரதமர் பதவிக்கு மோடி முன் நிறுத்தப்படுவதை நிதீஷ் குமார் கடுமையாக எதிர்த்து வருகிறார். பிகாரில் முஸ்லீம்கள் அதிகமாக உள்ளதால் மோடிக்கு ஆதரவு அளிப்பதில் நிதீஷ் தயக்கம் காட்டி வருகிறார். அவர், பாஜகவுடனான உறவைத் துண்டித்துக் கொள்ளவும் தி்ட்டமிட்டுள்ளார்.
இன்று முதல்வர்கள் கூட்டத்தில் மோடியும், நிதீஷ் குமாரும் ஒருவரை ஒருவரை சந்திப்பதை தவிர்த்துள்ளனர். இதனால் பாஜக கூட்டணி நெடுங்காலம் நீடிக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அது விரைவில் உடையும் வாய்ப்புள்ளது என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications