தஞ்சையில் சொத்து பிரச்சனையில் மகனை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற தாய்
தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே சொத்து பிரச்சனையில் பெற்ற மகனையே தாய் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு சாலை தெருவைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவி வள்ளியம்மை(60). அவர்களின் மகன்கள் கண்ணதாசன்(35) மற்றும் தேவதாசன்(32). அதில் கண்ணதாசனுக்கு தனது தாய் மற்றும் தம்பியுடன் சொத்து பிரச்சனை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 30ம் தேதி இரவு 8.30 மணிக்கு சொத்து பிரச்சனை குறித்து கண்ணதாசன், அவரது தாய் மற்றும் தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது. அப்போது வள்ளியம்மை தனது இளைய மகன் தேவதாசனுடன் சேர்ந்து மூத்த மகன் கண்ணதாசனை உருக்கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கண்ணதாசன் மயங்கி விழுந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கண்ணதாசனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது வள்ளியம்மையும், தேவதாசனும் அக்கம்பக்கதினரையும் தாக்கி கண்ணதாசனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிடாமல் தடுத்துள்ளனர். உடனே இது குறித்த தகவல் பரவாக்கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு பிரசவத்திற்கு சென்றிருந்த கண்ணதாசனின் மனைவி சுகன்யாவுக்கு தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்தவுடன் சுகன்யா விரைந்து வந்து தனது கணவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கண்ணதாசன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பட்டுக்கோட்டை போலீசார் தேவதாசனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வள்ளியம்மையை தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications