ராகுல் காந்தியிடம் ரூ500 கோடி நட்ட ஈடு கோருகிறது அசாம் கண பரிஷத்!
குவஹாத்தி: அசாம் கண பரிஷத் கட்சியை பயங்கரவாதிகளுடன் இணைத்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் ரூ500 கோடி நட்ட ஈடு கோர அந்த் கட்சி முடிவு செய்துள்ளது.
அசாம் கண பரிஷத் கட்சி பயங்கரவாதிகளுடன் துணையுடன்தான் அசாமில் ஆட்சி அமைத்தது என்று ராகுல் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டது. இந்த தவறான குற்றச்சாட்டுக்காக ராகுல் காந்தி 15 நாட்களுக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் அவரிடம் ரூ.500 கோடி நட்ட ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று அசாம் கண பரிஷத் இளைஞரணி தலைவர் கிஷோர் உபாத்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்திக்கு அக்கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ராகுல் கூறியது சரிதான் என்று காங்கிரஸ் தலைவரும், அசாம் மாநில முதல்வருமான தருண் கோகோய் கூறியுள்ளார். உல்ஃபா பயங்கரவாத அமைப்பின் உதவியுடன்தான அசாம் கண பரிஷத் ஆட்சி அமைத்தது என்கிறார் கோகோய்.












Click it and Unblock the Notifications