குந்த்ரா குழப்பம் - அவசரக் கூட்டத்தைக் கூட்டுகிறது பிசிசிஐ: டிஸ்மிஸ் ஆகுமா ஷில்பா அணி?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: பெட்டிங்கில் ஈடுபட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா சிக்கியுள்ளதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் அணியின் அவசரக் கூட்டம் கொல்கத்தாவில் கூட்டப்பட்டுள்ளது.

பிசிசிஐ விதிப்படி, எந்த ஒரு ஐபிஎல் அணியாவது வாரியத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால், அந்த அணியை நீக்கி உத்தரவிட முடியும். எனவே தொடர்ந்து சர்ச்சையில் ஈடுபட்டு வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நீக்குவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

BCCI calls emergency meet to discuss alleged betting by Raj Kundra

பிசிசிஐயின் இடைக்காலத் தலைவரான ஜக்மோகன் டால்மியா இக்கூட்டத்தை கொல்கத்தாவில் கூட்டியுள்ளார். வருகிற திங்கள்கிழமை இக்கூட்டம் நடைபெறுகிறது.

ராஜஸ்தான் அணியின் 3வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டுக் கைதாகியுள்ளனர். அந்த அணியின் இணைஉரிமையாளரான ராஜ்குந்த்ரா, கடந்த 3 வருடமாக பெட்டிங்கில் ஈடுபட்டிருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால் கிரிக்கெட் வாரியத்திற்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதையடுத்து ராஜ் குந்த்ரா விவகாரம் குறித்து விவாதிக்க அவசரக் கூட்ட் கூட்டப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+