திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்த 70 வயது முதிய தம்பதி படுகொலை
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோவளம் அருகே திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து வந்த 70 வயதுக்கு மேற்பட்ட முதிய தம்பதி படுகொலை செய்யப்பட்டனர்.
முதியவரின் பெயர் திவாகரன். 70 வயதாகும், இவர் திரேசம்மாள் என்ற 76 வயது மூதாட்டியுடன் தனியாக வசித்து வந்தார்.
35 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் தங்களது குடும்பம், குழந்தைளை விட்டுப் பிரிந்து வந்து வாழத் தொடங்கினர். இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இணைந்து வாழ்ந்து வந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு கோட்டக்கல் பகுதிக்கு இருவரும் இடம் பெயர்ந்து வந்து வாழ்ந்தனர். சில நாட்களாக இவர்கள் இருந்து வந்த வீடு திறக்கப்படாமல் இருந்தது. வீட்டிலிருந்து துர்நாற்றமும் வந்தது.
அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, இருவரும் பிணமாகக் கிடந்தனர். உடலில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. ரத்தம் வழிந்தோடி உறைந்து கிடந்தது.
ஏன் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்துத் தெரியவில்லை. வீட்டில் திருட்டு போகவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே கொலை செய்திருக்கலாமோ என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications