ஐபிஎல் பிக்ஸிங்... அந்த 'டைகர்' எந்த டைகர்... தாவூத் கும்பலுக்கு தொடர்பில்லையா?
டெல்லி: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் தாவூத் இப்ராகிம் கும்பலுக்கு தொடர்பே இல்லை என்று மும்பை போலீஸார் கூறுகிறார்கள்.
இதனால் இந்த வழக்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் டைகர் என்ற பெயர் அடிபடுகிறது. வழக்கமாக டைகர் என்று தாவூத் இப்ராகிம் தரப்பைச் சேர்ந்த டைகர் மேமனைத்தான் சொல்வார்கள். எனவே இந்த சூதாட்டத்திலும் தாவூத் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

அந்த டைகர் சந்தானி
ஆனால், உண்மையில் டைகர் என்ற பெயர் துபாயைச் சேர்ந்த பிரபலமான சூதாட்ட புக்கியான பிரகாஷ் சந்தானியைக் குறிப்பிடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் போலீஸாருக்குப் பெரும் சிக்கல் எழவுள்ளது.

தாவூத்தை நினைத்தே கடும் சட்டப் பிரிவு
காரணம், தாவூத் கும்பலுக்குத் தொடர்பு இருப்பதாக கருதித்தான், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கைதானவர்கள் மீது கடுமையான சட்டமான சட்டவிரோத செயல்கள் தடுப்புப் பிரிவைப் பாய்ச்சியுள்ளனர் போலீஸார். தற்போது தாவூத் கும்பலுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்ற விஷயம் வெளியாகியுள்ளதால், போலீஸாருக்கு சிக்கலாகியுள்ளது.

சுனில் துபாய்
பிக்ஸிங் விவகாரத்தில் தொடர்புடைய இன்னொரு நபரான சுனில் துபாய் என்பவருடன் இணைந்து இந்த சந்தானி செயல்படுவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கும், தாவூத் இப்ராகிமுக்கும் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது.

திசை திருப்பும் முயற்சியா
ஆனால் தாவூத் கும்பலுக்கு அவர்கள் எதிரியாக இருக்கலாம் என்றும் தங்களது சட்டவிரோத செயலை திசை திருப்பும் வகையில் டைகர் என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

டெல்லி போலீ்ஸ்செய்த குழப்பம்
டெல்லி போலீஸார்தான், பிக்ஸிங் விவகாரத்தில் தாவூத் கும்பலுக்குத் தொடர்பு இருப்பதாக கூறினார்கள். இதையடுத்தே எம்.சி.ஓ.சி.ஏ எனப்படும் சட்டவிரோத குற்றத் தடுப்புச்சட்டப் பிரிவு ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் மீது பாய்ந்தது. இதில் ஜாமீனில் வெளியே வரவே முடியாது. எவ்வளவு நாள் வேண்டுமானாலும் போலீஸார் குற்றவாளிகளை கஸ்டடியில் வைத்து விசாரிக்க முடியும். இதுபோன்ற பல கடுமையான அம்சங்கள் இந்த சட்டப் பிரிவில் உள்ளன.

சந்தானி போன வருஷமே கைதானவர்
தற்போது புதிதாக சந்தானியின் பெயர் அடிபடுவதால் போலீஸாருக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சந்தானி தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர் அல்ல. கடந்த ஆண்டே இந்த சந்தானியை மும்பை போலீஸார் பெட்டிங் விவகாரத்தில் கைது செய்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

அன்னா ஹஸாரே வந்தாரே
மேலும் இந்த சந்தானி ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் கூட. இவர் நிதின் மன்கமோன் என்பவருடன் இணைந்து கல கலி மெய்ன் சோர் ஹை என்ற படத்தைத் தயாரித்துள்ளார். அந்தப் படத்தின் வெளியீட்டுக்கு அன்னா ஹசாரே வேறு வந்திருந்தார்.

மேமன் பேச்சைக் கேட்டோமே
அதேசயம், தாவூத் கும்பலைச் சேர்ந்த டைகர் மேமன் பேசிய தொலைபேசி பேச்சுக்களை இடைமறித்துக் கேட்டதாகவும், அப்போதுதான் தாவூத் கும்பலுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததாகவும் டெல்லி போலீஸார் கூறியுள்ளனர். இதை கோர்ட்டிலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை போலீஸ் என்ன சொல்லுதுன்னா
ஆனால் மும்பை போலீஸார் என்ன சொல்கிறார்கள் என்றால், தாவூத் கும்பலுக்கு இதில் தொடர்பு இருப்பதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை. தாவூத் கும்பலின் பெட்டிங் விவகாரத்தை அவரது தம்பியான அனீஸ் இப்ராகிம்தான் பார்த்து வருகிறார். சந்தானிக்கு இதில் தொடர்பில்லை என்று கூறுகிறார்கள்.

குழப்பமோ பெரும் குழப்பம்
டெல்லி மற்றும் மும்பை போலீஸாரின் இந்த இரு வேறு விதமான நிலைப்பாடு காரணமாக பிக்ஸிங் வழக்கில் பெரும் குழப்பம் ஏற்படும் என்று தெரிகிறது. மேலும் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் மீது மிகக் கடுமையான சட்டப் பிரிவை பிரயோகித்துள்ளதும் சர்ச்சையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்திஷ் நந்தி கடும் எதிர்ப்பு
இதற்கிடையே, ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் மீது கடுமையான சட்டப் பிரிவை பாய்ச்சியிருப்பதற்கு மூத்த பத்திரிக்கையாளர் பிரித்திஷ் நந்தி கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், மிகக் கொடூரமான எம்சிஓசிஏ சட்டத்தை பயன்படுத்தியிருப்பது, கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பதை நிரூபிப்பது போல உள்ளது. இது நிச்சயம் நீதியே அல்ல என்று கடுமையாக சாடியுள்ளார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications