அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் யார் ? ஜெயலலிதா நாளை அறிவிக்கின்றார்!

தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 27ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அ.தி.மு.க.வுக்கு சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின்படி 5 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. இதில் 4 பேர் அதிமுகவினராகவும் மற்றொருவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராகவும் இருப்பார்.
இந்நிலையில் சென்னையில் நாளை அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்துக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தின் முடிவில் ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.
அதிமுகவின் வேட்பாளர்களாக மீண்டும் மைத்ரேயன், தமிழ் மகன் உசேன், டாக்டர் பொன்னையன், மலைச்சாமி ஐ.ஏ.எஸ், மருது அழகுராஜ், ராஜகண்ணப்பன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
