அடக்க அடக்க பீனிக்ஸ் பறவையாக எழும் திமுக - ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90 வது பிறந்த நாள் விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலுக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டி போட்டு தேர்தல் நிதியை வழங்கி வருகிறார்கள். தேர்தல் நிதி அதிகமாக வழங்கியதில், இந்த நிமிடம் வரை திண்டுக்கல் மாவட்டம் தான் முதலிடத்தை பெற்று உள்ளது என்பதை பெருமையோடு தெரிவிக்க விரும்புகிறேன்.
கடந்த 1967ம் ஆண்டில், முதல் பொதுத்தேர்தலை திமுக சந்தித்தபோது, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த ரூ.10 லட்சம் நிதி தேவையாக இருப்பதாக அண்ணா கூறினார். அப்போது திமுக பொருளாளராக இருந்த தலைவர் கலைஞர், தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ரூ.11 லட்சம் வசூலித்து கொடுத்தார்.
அதே பொருளாளர் பதவியில் இருந்து, நான் கடமையை நிறைவேற்றி வருகிறேன். பாராளுமன்ற தேர்தல் நிதி திரட்டும் பணி தொடங்கிய நாள் முதற்கொண்டு, என்னுடன் புகைப்படம் எடுத்து கொள்பவர்களிடம் தேர்தல் நிதி வசூலிக்கும் விதிமுறையை பின்பற்றி வருகிறேன்.
தமிழகத்தின் 150 ஆண்டு கால கனவு திட்டமான சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் திமுகவுக்கும், கலைஞருக்கும் பெயர் கிடைத்து விடும் என்ற நோக்கத்தில், அந்த திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருக்கிறார். இதேபோல் புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால் அதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ளவில்லை. திமுக ஆட்சி காலத்தில் புதிதாக தலைமை செயலகம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் அண்ணா அறிவாலயத்தின் கிளை அலுவலகமோ, கலைஞரின் சொந்த கட்டிடமோ இல்லை. அது, மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டதாகும். அந்த கட்டிடத்தை முடக்கி விட்டார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அண்ணா நூலகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இதேபோல் உச்சநீதிமன்ற தீர்ப்பினால், சமச்சீர் கல்வி திட்டத்தை எதுவும் செய்ய முடியவில்லை. ஏழைபணக் காரர் பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே கல்வி கிடைத்து வருகிறது.
இதுமட்டுமின்றி 10ம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு 9 பேர் முதலிடத்தையும், 52 பேர் 2வது இடத்தையும், 137 பேர் 3வது இடத்தையும் கைப்பற்றி இருப்பதற்கு சமச்சீர் கல்வியே காரணம் ஆகும். கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் விரல் விட்டு சொல்லும் அளவுக்கு அதிமுக அரசு எந்த சாதனையையும் செய்யவில்லை.
திமுக ஆட்சி காலத்தில் 2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. ஆனால் தற்போது 18 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையின் 7வது பக்கத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டை முற்றிலும் நீக்குவோம் என்று அதிமுக வினர் குறிப்பிட்டு இருந்தனர்.
ஆனால் இதுவரை மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. மின்சாரத்தை பற்றி பேசுவதற்கு சட்டமன்றத்தில் அனுமதி அளிப்பதில்லை. மின்சாரம் என்றவுடன், அவர்களுக்கு ஷாக் அடிக்கிறது.
கடந்த ஆட்சி காலத்தைவிட, தற்போது 2 மடங்கு குற்றசம்பவங்கள் அதிகரித்துள்ளன. திண்டுக்கல் மாவட்டத்திலும் பட்டப்பகலில் பல்வேறு குற்றசெயல்கள் நடந்துள்ளன.
ஆதாரங்களை கையில் வைத்து கொண்டு நான் பேசுகிறேன். என்மீது வழக்கு போட்டாலும் அதை சந்திப்பேன். பொய் வழக்குகள் போட்டு திமுகவை ஒடுக்க முடியாது. பீனிக்ஸ் பறவையை போன்ற இயக்கமாக திமுக விளங்குகிறது என்றார் அவர்.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications