எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் ரேண்டம் எண் வெளியீடு…
சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 சீட்டுகளும், அதே போல் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும் 838 எம்.பி.பி.எஸ். இடங்களும், 909 பி.டி.எஸ். சீட்டுகளும் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்பட உள்ளன.இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 29 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இதனையடுத்து எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள 29 ஆயிரம் பேருக்கு கம்ப்யூட்டர் மூலம் ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது.
காதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, துறையின் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் வம்சதாரா, மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாணவர்கள் www.tnhealth.org என்ற தமிழக சுகாதாரத்துறையின் இணையதளத்திற்கு சென்று தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டால் அவர்களுக்கான ரேண்டம் நம்பரை தெரிந்துகொள்ளலாம்.
பொறியியல் படிப்பைப் போன்று மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையிலும் ஒரே கட் ஆப் மார்க் பெறும் மாணவர்களுக்கு கலந்தாய்வின்போது முன்னுரிமை அளிக்க கடைசி வாய்ப்பாக ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் மூலம் ரேண்டம் நம்பர் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications