பாமக அங்கீகாரம் ரத்து… ராமதாஸ், வன்னியர் சங்கம் பதிலளிக்க ஹைகோர்ட் நோட்டீஸ்

சென்னை தாம்பரத்தை சேர்ந்த வாராகி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அதில் கூறியிருப்பதாவது:
கடந்த மாதம் 25ஆம் தேதி பா.ம.க சார்பில் சித்திரை திருவிழா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நடத்த சில நிபந்தனைகளுடன் பா.ம.க.வினருக்கு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுமதி வழங்கினார். ஆனால், இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பா.ம.க.வினர் மீறியுள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை சேப்படுத்தியுள்ளனர்.
மரக்காணத்தில் அப்பாவி தலித் மக்கள் மீது கொடூரமாக தாக்கல் நடத்தி, அவர்களது வீடுகளை பா.ம.க.வினர் தீ வைத்து எரித்துள்ளனர். மேலும் 3 அரசு பேருந்துகள், 3 தனியார் வாகனங்கள், துணை சூப்பிரண்டுகளின் வாகனங்கள் ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தி, தீ வைத்துள்ளனர்.
இருபிரிவினர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி, அரசியல் சட்டத்துக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கும் எதிராக செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மனு தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், பா.ம.க., வன்னியர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications