ராஜ்யசபா தேர்தல்: அதிரடியாக 6வது வேட்பாளரை நிறுத்த ஜெ. ப்ளான்?

தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபையில் அதிமுகவுக்கு 151 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் அக்கட்சியின் சார்பாக தேர்வாவது உறுதியானது. எஞ்சிய எம்.எல்.ஏக்களின் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளிப்பதாக அதிமுக கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது. அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் யார் வேட்பாளர் என்ற பெரும் குழப்பமும் நீடித்து வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜாவையே மீண்டும் எம்.பி.யாக்க வேண்டும் என்று அக்கட்சியில் மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஆனால் மாநிலச் செயலர் தா. பாண்டியனோ என்னைத் தான் எம்.பி. தேர்தலில் ஜெயலலிதா நிற்க சொல்லி இருக்கிறார் என்று அடம்பிடித்து வருகிறார். இதனால் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடனான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் சந்திப்பு இழுத்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் தேமுதிகவில் இருந்து மேலும் பல எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணிக்கு செல்லப் போவதாகவும் போட்டி தேமுதிக உருவாகப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. அதிமுக திட்டப்படி போட்டி அதிமுக உதயமாகிவிட்டால் அல்லது எம்.எல்.ஏக்கள் தாவுவது உறுதியானால் ராஜ்யசபா தேர்தல் ந்டைபெறும் 27-ந் தேதிக்கு முன்பாக ஒரு அதிரடியை நிகழ்த்தவும் ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது 26-ந் தேதி அன்று 6வது வேட்பாளரையும் அறிவித்து தேமுதிக, திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும் கொடுப்பார் ஜெயலலிதா என்கின்ற்னர். இப்படி 6வது வேட்பாளரை நிறுத்தி வளைக்கப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஒரு மேஜிக்கை ஜெயலலிதா நிகழ்த்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஆ! செஞ்சாலும் செய்வாங்கப்பா..
-
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications