3ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 9ம் வகுப்பு மாணவன் கைது… புதுச்சேரியில் கொந்தளிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் 3ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருக்கு நாராயணன் என்ற 10 வயது மகனும், சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 8 வயது மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் மணவெளியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
கணவர் இல்லாத தமிழ்செல்வி கூலித் தொழில் செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். நேற்று இரவு சிறுவன் நாராயணன் தனது தங்கை சுமதியை அழைத்து கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது மணவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் பிரகாஷ் என்ற மாணவன், நாரயணனையும் சுமதியையும் நிறுத்தி பேச்சு கொடுத்துள்ளான். நாராயணனை மட்டும் கடைக்கு போக சொல்லிவிட்டு சுமதியை யாரும் இல்லாத மறைவிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்த சம்பவத்தை சுமதி அழுது கொண்டே தனது தாய் தமிழ்செல்வியிடம் கூறியிருக்கிறார். அதையடுத்து தமிழ்செல்வி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமி சுமதியை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பெற்றோர்கள் போராட்டம்
சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கோரி உறவினர்களும் அந்த பகுதி பொதுமக்களும், அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications