ஐபிஎல் அணி உரிமையாளர்களே சூதாடுவது கேவலமான செயல்! - ஷாரூக்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றது தொடர்பாக 3 மூன்று கிரிக்கெட் வீரர்கள், பல தரகர்கள், தாரா சிங்கின் மகன் விண்டூ தாரா சிங் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்தரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் இதுகுறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஒருவர் சூதாடும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தாலும், அணியின் உரிமையாளராக இருக்கும் போது இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.
அணியின் உரிமையாளராக ஒருவர் இருக்கும் போது, விதிமுறைகளையும் அதில் உள்ள ஓட்டைகளையும் நன்கு அறிவார்கள். இதனை தவறாக பயன்படுத்துவது கேவலமான செயலாகும்.
ராஜ் குந்தர், சில்பா ஷெட்டியின் கணவர். ராஜ் எனது நண்பர்தான். நான் அவர்களுக்கு நெருக்கமானவன். நண்பர் என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு எதையும் ஆதரிக்க மாட்டேன். இந்த குற்றச்சாட்டு குறித்து நாம் உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாது. அவர் இந்த பிரச்சினைகளை சட்டப்படி சந்திக்க வேண்டும். அதன் முடிவை ஏற்க வேண்டும்.
சூதாட்டத்தில் ஈடுபடுவது வெறுக்கத்தக்க செயல். சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்," என்றார்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications