வள்ளியூர் நீதிமன்றத்தில் பணம் திருட்டு போலீசில் புகார்

பொதுவாக நிதி மோசடி உள்ளிட்ட வழக்குகளில் போலீஸாரால் கைப்பற்றப்படும் பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்படும். ஆனால், சில வழக்குகளில் பணம் மற்றும் அவற்றின் எண்கள் முக்கிய சாட்சியமாக இருப்பதால் அவற்றை நீதிமன்றத்தில் இருக்கும் லாக்கரிலேயே வைத்து இருப்பார்கள். வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழக்கபப்டும் வரையிலும் நீதிமன்ற சிரஸ்தாரின் கட்டுப்பாட்டில் அந்த பணம் இருக்கும்.
இந்த நிலையில், வள்ளியூர் சார்பு நீதிமன்ற லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 27 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளது. இது தொடர்பாக விசாரித்தும் பணத்தை எடுத்தது யார்? என்பது தெரியவராததால், வள்ளியூர் சார்பு நீதிம்னற நீதிபதியான ஜான் சந்தோசம் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
நீதிமன்ற வளாகத்திலேயே நடைபெற்று இருக்கும் இந்த துணிச்சலான திருட்டு சம்பவம் நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications