என் பிறந்தநாளுக்கு இன்னும் வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது: கருணாநிதி
சென்னை: தனது 90வது பிறந்தநாள் முடிந்தும் இன்னும் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜூன் 3 அன்று எனது 90-வது பிறந்த நாளினை கழக உடன் பிறப்புகள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடினர். தமிழகத்தில் திமுகவை தாண்டி, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தோழர்களும், தமிழ் மக்களும், தமிழ் ஆர்வலர்களும், தமிழ்க் கவிஞர் பெருமக்களும் எனது பிறந்த நாளையொட்டி பெருமை சேர்த்தனர்.
இந்தியத்துணை கண்டத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், தேசிய அரசியல் தலைவர்கள் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். எனது பிறந்த நாளையொட்டி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் வாழ்த்துச் செய்திகளை கடிதம் மூலமாகவும், தந்தி மூலமாகவும், குறுஞ்செய்தி - இணையதளம் என்று இன்னும் அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள்.
பிரிட்டன், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, கனடா, நார்வே, சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிடன், நெதர்லாந்து, போர்ச்சுக்கல், மெக்சிகோ, ஈரான், சீனா, தாய்லாந்து, குவைத் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து இதுவரை 12 லட்சத்து 67 ஆயிரத்து 427 பேர் குறுஞ்செய்தி - இணையதளம் மூலம் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருக்கிறார்கள்.
மேலும் தபால் மூலமும், தந்தி மூலமும் 5 ஆயிரத்து 600 பேர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்தும், உலகின் பல நாடுகளிலிருந்தும் எனது பிறந்த நாளினையொட்டி வாழ்த்துச் செய்திகளை அனுப்பி என்னை பெருமைப்படுத்தியிருக்கும் ஆன்றோர், சான்றோர், தமிழ் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அளவிற்கு என்னிடத்தில் அன்பும், பாசமும் கொண்டுள்ளோருக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்பது தான் என் உள்ளத்தை இப்போது முழுவதுமாக ஆக்கிரமித் திருக்கிறது. இது குறித்து தான் 5.6.2013 அன்று நான் எழுதிய உடன் பிறப்பு மடலில், இந்த அளவிற்கு என்னிடம் பாசத்தையும், அன்பையும் கொட்டுகிறார்களே, இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? என்மனதாலும், செயலாலும் தொடர்ந்து உழைப்பேன், உழைப்பேன், தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று உறுதி கூறி எழுதியிருந்தேன். அந்த வாக்குறுதியை வெளிநாட்டில் வாழும் உடன் பிறப்புகளுக்கும் காணிக்கை ஆக்குகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர்












Click it and Unblock the Notifications