சென்னை புறநகரில் பேய் மழை.. பலத்த காற்றுடன்!

தமிழகத்தில் பரவலாக கடலோரப் பகுதிகளில் இன்று மழை பெய்யலாம் என ஏற்கனவே வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று மாலை சென்னை புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
தாம்பரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நல்ல காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஊரே குளிர்ந்து போனது. விமான நிலையப் பகுதியில் சூறைக் காற்றுடன் பெய்த கன மழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் வழக்கம் போல மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் நின்று பெரும் குளறுபடியானது.
இந்த திடீர் மழையால் புறநகர்ப் பகுதிகள் குளிர்ந்து போயுள்ளன. கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழை மக்களை மகிழ்வித்துள்ளது.
கத்திரி வெயில் முடிவுக்கு வந்தநிலையில் அவ்வப்போது சென்னையில் மழை எட்டிப் பார்ப்பதால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications