நரேந்திர மோடி நியமனம் குறித்து நேரடியாக பதில் சொல்லாத ஜெ.!
சென்னை: சென்னை: நரேந்திர மோடிநியமனம் குறித்து நேரடியாக பதில் சொல்லாத முதல்வர் ஜெயலலிதா, அவர் எனது நண்பர் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எப்போதுமே உண்டு என்று தெரிவித்தார்.
டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா பாஜக தேர்தல் பிரச்சாரக்குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு தெரிவித்தார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நீண்ட காலமாகவே நண்பர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தை சூடுபிடித்துள்ளது. பாஜகவும் தேர்தல் வியூகங்கள் வகுத்து வரும் நிலையில், கோவாவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் நரேந்திர மோடி பாஜக தேர்தல் பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள் கட்சி விவகாரம்
இந்த நியமனம் பற்றி டெல்லி சென்றுள்ள ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், அது உட்கட்சி விவகாரம், அது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

மோடி என் நண்பர்
தனிப்பட்ட முறையில் மோடி எனக்கு நல்ல நண்பர், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எப்பொழுதுமே உண்டு' என்றும் கூறினார். ஜெயலலிதா.

மோடி சிறந்த நிர்வாகி
மேலும், மோடி ஒரு சிறந்த நிர்வாகி குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுபவர் அதனாலேயே மூன்று முறை முதல்வராக வெற்றி பெற்றுள்ளார் என்றும் ஜெயலலிதா புகழ்ந்தார்.

ஜெ விழாவில் மோடி
2011ல் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்ற போது அந்த விழாவில் நரேந்திர மோடி கலந்துகொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் மோடி பங்கேற்றார்.

குஜராத்தில் ஜெ.
இதேபோல் நரேந்திர மோடி முதல்வராக பதவியேற்ற போது இரண்டு முறை ஜெயலலிதா கலந்து கொண்டிருக்கிறார். பாஜக உடன் கூட்டணியில் இணைந்தாலும், இல்லாவிட்டாலும் ஜெயலலிதா - மோடி இடையேயான நட்பு நீண்ட நாட்களாக தொடர்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications