உலகின் அதிக வயதான ஜப்பான் தாத்தா மரணம்
டோக்கியோ: உலகத்திலேயே அதிக வயதுடையவர் என்ற பெருமையை பெற்ற ஜப்பானை சேர்ந்த ஜிரோமோன் கிமுரா (Jiroemon Kimura) இன்று அதிகாலை உயிரிழந்தார். 116 வயதான அவர், நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.சிகிச்சை பயனளிக்காத்தால், கிமுரா இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1897ம் ஆண்டு ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது இளமைப் பருவத்தில் தபால் துறை ஊழியராக பணியாற்றினார்.தனது 115வது ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது நீண்ட ஆயுளுக்கு அதிக நேரம் சூரிய வெளிச்சத்தின் கீழ் நின்றிருப்பதுதான் காரணம் என்று அவர் கூறியிருந்தார்.

கின்னஸ் அங்கீகாரம்
2012-ம் ஆண்டு இவரை உலகின் மிக வயதான முதியவராக கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்தது. அவருக்கு 7 பிள்ளைகள், 14 பேரக் குழந்தைகள், 25 கொள்ளுப்பேரன் பேத்திகள், 15 எள்ளுப்பேரன் பேத்திகள் உள்ளனர். இறுதிக் காலத்தை விவசாயம் செய்வதில் கழித்த கிமுரா இன்று மரணமடைந்தார்.

அடுத்த தாத்தா யார்?
கிமுரா உயிரிழந்த நிலையில், அவரது இடத்தை பிடிக்க மற்றொரு ஜப்பானியரான 115 வயதாக மிசாவோ உகாவாவுக்கு (Misao Ookawa) வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

50 ஆயிரம் முதியவர்கள்
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நூறு வயதை கடந்த சுமார் 50 ஆயிரம் பேர் ஜப்பானில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications