மூன்றாவது அணி.. நிதீஷ், நவீன் பட்நாயக்குடன் மம்தா ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

Mamata speaks to Nitish, Naveen about federal front
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வரும் லோக்சபா தேர்தலில் 3வது அணி அமைப்பது தொடர்பாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் மோடியை முன்னிறுத்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும் பீகார் முதல்வருமான் நிதீஷ் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இருப்பினும் கோவா செயற்குழுக் கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக மோடி அறிவிக்கப்பட்டார். இதனால் அவரே பிரதமர் வேட்பாளராகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலகக் குரல் எழுப்பினார். இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மம்தா மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதுதொடர்பாக நிதீஷ் குமார் மற்றும் நவீன் பட்நாயக் ஆகியோருடன் மம்தா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். ஐக்கிய ஜனதா தள பொதுச் செயலாளர் கே.சி. தியாகி, மம்தாவை கொல்கத்தாவில் அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் மம்தா செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது கூட்டணி அமைப்பது தொடர்பாக, கடந்த திங்கள்கிழமை ஃபேஸ்புக் மூலம் மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். இதையடுத்து, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சித் தலைவரும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி உள்ளிட்ட சிலர் என்னைச் சந்தித்துப் பேசினர்.

இதுதொடர்பாக பீகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் நேற்று தொலைபேசியில் பேசினேன். ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக்குடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் மூன்றாவது அணி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

மூன்றவாது அணியை பலப்படுத்துவது தொடர்பாக, பல்வேறு மாநில கட்சித் தலைவர்களுடன் விரைவில் பேச உள்ளோம். அனைத்துக் கட்சித் தலைவர்களும் எப்போது, எங்கே சந்தித்துப் பேசுவது என பின்னர் அறிவிக்கப்படும் என்றார் மம்தா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+