Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர்.. சிபிஐயிடம் சிக்குகிறார் உளவுத்துறை சிறப்பு இயக்குநர்!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத்தில் இளம் பெண் இஷ்ரத் ஜகான் உள்ளிட்டோர் போலி என்கவுகண்டரில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு உளவுத்துறை அதிகாரிக்குத் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ஐபி எனப்படும் உளவுத்துறையில் பணியாற்றி வரும் முக்கியமான அதிகாரி அவர் என்று சிபிஐ கூறியுள்ளது.

அந்த அதிகாரிக்கு இந்த கொலையில் உள்ள தொடர்புக்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் சிபிஐ கூறியுள்ளது.

19 வயது இளம் பெண்

19 வயது இளம் பெண்

2004ம் ஆண்டு குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டரில் 19 வயதான இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

உளவுத்துறை அதிகாரிக்குத் தொடர்பு

உளவுத்துறை அதிகாரிக்குத் தொடர்பு

இந்த கொலையில் முக்கிய உளவுத்துறை அதிகாரிக்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார்.

போதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன

போதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன

இதுகுறித்து சின்ஹா கூறுகையில், அந்த மூத்த உளவுத்துறை அதிகாரிக்கு உள்ள தொடர்புக்கான போதிய ஆதாரங்கள் சிக்கியுளஅளன. இதையடுத்து மேல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார்

அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார்

அந்த மூத்த உளவுத்துறை அதிகாரி அடுத்த மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளதாக கூறப்படுகிறது. அவரது பெயர் ராஜேந்திர குமார். தற்போது ஐபியின் சிறப்பு இயக்குநராக அவர் இருக்கிறார்.

ஏ.கே.47 துப்பாக்கியைக் கொடுத்தவர்

ஏ.கே.47 துப்பாக்கியைக் கொடுத்தவர்

போலி என்கவுண்டர் நடந்த இடத்தில் ஒரு ஏ.கே. 47 துப்பாக்கியை கண்டுபிடித்ததாக போலீஸார் கூறியிருந்தனர். உண்மையில் அந்த துப்பாக்கியைக் கொடுத்தவரே இந்த ராஜேந்திரகுமார்தான் என்று சிபிஐ கூறுகிறது.

நேரடித் தொடர்பு

நேரடித் தொடர்பு

எனவே இந்தக் கொலையில் ராஜேந்திர குமாருக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும், கொலைச் சதியிலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் சிபிஐ கூறுகிறது.

செவ்வாய்க்கிழமை விசாரணை

செவ்வாய்க்கிழமை விசாரணை

ராஜேந்திர குமாரை இன்று விசாரிக்க சிபிஐ முடிவு செய்திருந்தது. ஆனால் ராஜேந்திர குமாரின் தந்தைக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இஷ்ரத் உள்ளிட்டோர் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலைசெய்யும் திட்டத்துடன் அகமதாபாத் வந்தார்கள் என்றும் குஜராத் போலீஸ் கூறியது. ஆனால்இது போலி என்கவுண்டர் என்பது பின்னர் தெரிய வந்தது நினைவிருக்கலாம்.

சிபிஐக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம்

சிபிஐக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம்

இதற்கிடையே இந்த வழக்கில் சிபிஐக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேவையில்லாத விஷயங்களில்தான் சிபிஐ அதிக கவனம் செலுத்துகிறது. அதை விட்டு விட்டு விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறும், கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகளா அல்லது சாதாரண பிரஜைகளா என்பதை தெளிவாக தெரிவிக்குமாறும் சிபிஐக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+