பீகார் அரசிலிருந்து விலகுவோம், ஆதரவை வாபஸ் பெறுவோம் - பாஜக மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் மாநில அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம். அரசிலிருந்து விலகுவோம் என்று பீகார் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், மாநில அமைச்சருமான பாஜகவைச் சேர்ந்த நந்த் கிஷோர் யாதவ் கூறியுள்ளார்.
யாதவ், பீகார் மாநில சாலை கட்டுமானத்துறை அமைச்சராக இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், நிதீஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் ஆளுநரை சந்தித்து அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம். அமைச்சரவையிலிருந்தும் விலகுவோம். நாங்கள் இல்லாவிட்டால் நிதீஷ் அரசு சிறுபான்மை அரசாகி விடும். எனவே நிதீஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றார் அவர்.
பீகார் சட்டசபையில், பாஜகவுக்கு 91 உறுப்பினர்கள் உள்ளனர். நிதீஷ் கட்சிக்கு 118 பேர் உள்ளனர். மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 243 ஆகும்.












Click it and Unblock the Notifications