டோணியை விட டிவியில் அதிகம் தெரியும் மூஞ்சி கோஹ்லிதானாம்...!
மும்பை: இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணியை விட விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரராக விராத் கோஹ்லி உருவெடுத்துள்ளார். இவரை வைத்து விளம்பரங்களை ஒளிபரப்பத்தான் இப்போது விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றனவாம்.
மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸிங் என்று ஒருபக்கம் அக்கப்போராக இருந்தாலும் கிரிக்கெட் வீரர்களை வைத்து விளம்பரம் தேடும் விளம்பர நிறுவனங்களும் அதிகரித்தபடிதான் உள்ளது.
சமீப காலம் வரை டோணிதான் விளம்பரதாரர்களால் அதிகம் விரும்பப்பட்ட பிரபலமாக இருந்தார். ஆனால் தற்போது மெதுவாக அவரை ஓவர்டேக் செய்ய ஆரம்பித்துள்ளார் கோஹ்லி.

கோஹ்லி பக்கம் திரும்பும் பார்வை
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக வர்ணிக்கப்படுபவர் கோஹ்லி. இப்படிச் சொல்லிச் சொல்லியே அவரைப் பிரபலமாக்கி விட்டனர். இதனால் விளம்பரதாரர்களும் கோஹ்லி பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

200 சதவீதம் அதிகரிப்பு
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோஹ்லி இடம் பெற்ற டிவி விளம்பரங்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.

கோஹ்லி வசம் 13 பிராண்டுகள்
தற்போது கோஹ்லி 13 பிராண்டுகளை விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்தி வருகிறாராம்.

வருடத்திற்கு ரூ. 40 கோடி
விளம்பரங்கள் மூலம் கோஹ்லிக்குக் கிடைக்கும் வருவாயும் உயர்ந்தவண்ணம் உள்ளதாம். அதாவது தற்போது அவர் ரூ. 40 கோடி வரை விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறாராம்.

பிராண்ட் கட்டணம் உயர்வு
கடந்தஆண்டு வரை ஒரு பிராண்டுக்கு அவர் விளம்பரதாரராக இருக்க வருடாந்திர கட்டணமாக ரூ. 3 கோடி வாங்கினார். தற்போது இது ரூ. 6 கோடியாக உயர்ந்துள்ளது.

புதிதாக சேர்ந்த நெஸ்லே-சிந்தால்
சமீபத்தில் நெஸ்லே மன்ச் மற்றும் சிந்தால் டியோ ஆகிய இரு புதிய விளம்பரங்களில் இணைந்தார் கோஹ்லி. விரைவில் ஷாம்பு, பொம்மை மற்றும் லேப்டாப் விளம்பரங்களில் அவர் தோன்றப் போகிறார்.

டோணியின் அடுத்த வாரிசு
டோணியை விட இளையவர் என்பதும், டோணிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் என்பதும் கோஹ்லிக்கு கூடுதல் தகுதிகளாக அமைந்துள்ளதாம்.

இப்போதைக்கு டோணிதான் நம்பர் ஒன்
தற்போதைக்கு டோணிதான் முதலிடத்தில் இருக்கிறார் என்பது டோணி ஆதரவாளர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும். அவர் விளம்பரங்கள் மூலம் ஆண்டுதோறும் ரூ. 100 கோடி வரை சம்பாதிக்கிறார். ஒரு பிராண்டுக்கு அவர் வசூலிக்கும் வருடாந்திர கட்டணம் ரூ. 10 கோடியாகும்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications