விஸ்வரூபமெடுக்கும் தெலுங்கானா...10 மாவட்டங்களில் பந்த்
ஹைதராபாத்: ஆந்திராவில் தனி தெலுங்கானா கோரி சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தை ஒடுக்கியதைக் கண்டித்து 10 மாவட்டங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
தெலுங்கானா கோரி ஆந்திர சட்டசபை நோக்கி பேரணி நடத்த தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்து இருந்தது. இதற்கு சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமதி கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால் மாவோயிஸ்டுகள் ஊடுருவி வன்முறையில் ஈடுபடுவர் எனக்கூறி போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்,
இருப்பினும் போலீஸ் தடையை மீறி சட்டசபையை நோக்கி தெலுங்கானா போராட்டக்குழுவினர் பேரணி நடத்த முயன்றனர். அவர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். இப் போராட்டத்தில் கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சட்டசபை முற்றுகை போராட்டத்தை வலுக்கட்டாயமாக போலீசாரை கொண்டு ஒடுக்கியதாக கூறி ஆந்திர அரசை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்தார்.
அதன்படி ஹைதராபாத் கரீம்நகர், மெகபூப் நகர், நல்கொண்டா உள்பட தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தால் பள்ளி, கல்லூரிகள் இன்றும் மூடப்பட்டன.












Click it and Unblock the Notifications