காஞ்சிபுரம்: கருணாநிதி பிறந்தநாள் விழாவில் சோகம்: மின்சாரம் தாக்கி மூவர் மரணம்
காஞ்சிபுரம்: தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா ஏற்பாட்டின் போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை ஜூன் 3ஆம் தேதியிலிருந்து, தொடந்து கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கல்வெட்டு திறப்புகளும், கண்டன ஆர்ப்பாட்டமும் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள மொளச்சூர் கிராமத்தில், மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கல்வெட்டு மற்றும் கொடிகம்பம் திறப்பு விழா நடைபெறுவதாக இருந்தது.
இந்த விழாவுக்காக இரவு 2.30 மணிஅளவில் கல்வெட்டு பதிக்கும் பணி நடந்தது. இரவு நேரம் என்பதால் உயர்மின்னழுத்தம் கொண்ட மின்கம்பிகள் மேலே செய்வதை யாரும் கவனிக்கவில்லை. இதனால் கொடிக்கம்பம் மின்கம்பியில் பட்டதால் மின்சாரம் பாய்ந்தது. இதை அறிந்த பலரும் ஓடிவிட்டனர்.
ஆனால், சுமார் ஒரு மணிநேரம் கழித்து அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் அங்கு மின்சாரம் பாய்ந்து 3 பேர் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் அவர்கள் தி.மு.க. கிளை கழக செயலாளராக இருந்த சி.பாஸ்கர், டி. பாஸ்கர் மற்றும் முருகன் ஆகியோர் என்பது தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் டி.பாஸ்கரன் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications