ராஜ்யசபா தேர்தல்.. திமுக வேட்பாளராக கனிமொழி மனுத் தாக்கல் செய்தார்!

தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக ஏற்கெனவே 5 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. 23 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுக, 10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரசின் ஆதரவை கோரியிருந்தது. அதேபோல் 22 எம்.எல்.ஏக்களை தம் வசம் வைத்திருக்கும் தேமுதிகவின் ஆதரவையும் கோரியது. இதில் உத்திரவாதங்கள் கிடைத்த நிலையில்தான் கனிமொழி வேட்புமனுவைத் தாக்கல் செய்யப் போவதாக காலை முதலே செய்திகள் பரவின.
இன்று காலையில் திமுக தலைவரும் தந்தையுமான கருணாநிதியை சந்தித்து கனிமொழி வாழ்த்துப் பெற்றார். பின்னர் தலைமைச் செயலகத்துக்கு சென்ற கனிமொழி தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் 6வது வேட்பாளர் இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளரை நிறுத்தினால் வாக்கெடுப்பு நடைபெறக் கூடிய சூழல் உருவாகும். அப்படி 6 வது இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்.தேமுதிக உள்ளிட்ட எந்த ஒரு கட்சியுமே வேட்பாளரை நிறுத்தாத நிலையில் கனிமொழி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.












Click it and Unblock the Notifications