தமிழகத்தில் ஈழப் போராட்டங்களுக்கு அடிகோலிய மாமனிதர்!- மணிவண்ணனுக்கு புலிகள் அஞ்சலி

இயக்குநர் மணிவண்ணன் மறைவையொட்டி இன்று விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பில் இணைப்பாளர் ராமு சுபன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டைச் சேர்ந்த இன உணர்வாளர் இயக்குநர் திரு. மணிவண்ணன் அவர்கள் காலமான செய்தி உலகத்தமிழர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எம்மினம் எதிர்கொண்டுவரும் இனஅழிப்புக்கு எதிராகவும் திரு. மணிவண்ணன் அவர்களது குரல் ஓயாது ஒலித்து வந்துள்ளது.
இவர் வெறும் பேச்சாளராக மட்டும் தன்னை மட்டுப்படுத்தாமல் பல்வேறு தளங்களில் ஈழ விடுதலைக்காகவும் சமூக விடுதலைக்காகவும் உண்மையான இன உணர்வோடு உழைத்த களச்செயற்பாட்டாளர்.
ஈழப் போராட்டத்தோடு திரு மணிவண்ணன் அவர்களின் தொடர்பும் பங்களிப்பும் அளப்பெரியது.
எமது தாயகத்துக்கு நேரடியாக வருகை தந்து எமது போராட்டத்தோடும் எமது மக்களோடும் தன்னை ஒன்றித்துக் கொண்டவர். எமது போராட்டம் தொடர்பில் ஆழமான பார்வையைக் கொண்டிருந்த திரு. மணிவண்ணன் அவர்கள் தமிழகத்தில் ஈழப்போராட்டச் செயற்பாடுகள் பலவற்றுக்கு அடிகோலியவர்.
தேசிய விடுதலைப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும் என்ற தேசியத் தலைவரின் கூற்றுப்படி மணிவண்ணன் ஐயாவும் மனவுறுதி படைத்த ஒரு செயற்பாட்டாளராகவே திகழ்ந்தார்.
மணிவண்ணன் ஐயா அவர்களின் இழப்பு, இச்சந்தர்ப்பத்தில் ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரை பேரழிப்பாகும். ஈழ விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்து உழைத்த ஆயிரமாயிரம் செயற்பாட்டாளர்கள் வரிசையில் மணிவண்ணன் ஐயாவும் இணைந்து கொண்டுள்ளார்.
அவரின் கனவான ஈழவிடுதலையை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து உழைப்பதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாக அமையும்.
விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்படுவது மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும் என்று கலைஞர்கள் தொடர்பில் தேசியத்தலைவர் குறிப்பிட்டதைப் போன்று தனது இன மக்களுக்கான போராட்டத்தோடு ஒன்றித்து வாழ்ந்த மணிவண்ணன் ஐயாவின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications