இவங்க பர்மிஷன் இல்லாம, இனி நீங்க ‘ஹாப்பி பர்த்டே டூ யூ’னு பாடக்கூடாதாம்...
நியூயார்க்: ஆங்கிலம் தெரியாத நம்ம கிராமத்து அப்பத்தாக்கள் கூட, தங்கள் கொள்ளு பேரன், பேத்திகளை ஆங்கிலத்தில் ‘ஹாப்பி பர்த் டே டூ யூ' எனத் தான் பாடி வாழ்த்துகிறார்கள். அந்தளவுக்கு பிரபலமானது அந்தப் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல்.
ஆனால், தற்போது அந்தப் பாடல் எங்களுக்குத் தான் சொந்தம். எங்கள் அனுமதியில்லாமல் யாராவது அந்தப் பாடலைப் பயன் படுத்தினால் நஷ்ட ஈடு தர வேண்டும் எனக் கூறி பிரபல நிறுவனம் ஒன்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இதனை எதிர்த்து, ஹேப்பி பர்த்டே பாடல் அனைவருக்கும் சொந்தம் என உத்தரவிடக் கோரி வழக்கு ஒன்று அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

சர்ச்சையில் ‘ஹேப்பி பர்த் டே’...
‘ஹேப்பி பர்த்டே டூ யூ. இந்த பாடல் எழுதி இசையமைக்கப்பட்டு 120 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது இந்த பாடல் யாருக்கு சொந்தம் என்பது குறித்து பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

சட்டவிரோதம்...
இதற்கு கண்டனக் குரல் வழுத்து வரும் நிலையில், ‘இப்பாடல் பொதுச்சொத்து. யாரும் இதற்கு உரிமை கோர முடியாது. நஷ்ட ஈடு வசூலிப்பது சட்ட விரோதமானது' என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

குட் மார்னிக் டூ ஆல்...
1893ம் ஆண்டு அமெரிக்காவின் பேட்டி மற்றும் மைல்ட்ரெட் ஹில் சகோதரிகளால் உருவாக்கப்பட்ட ‘குட் மார்னிங் டு ஆல்' என்ற பாடலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதே, 'ஹேப்பி பர்த்டே டு யூ'.

நஷ்ட ஈடு வசூல்...
1998ம் ஆண்டு வார்னர் சேப்பல் நிறுவனத்தார் இதன் காப்புரிமை தங்களுடையது என அறிவித்தது. . பல கோடி செலவிட்டு தாங்களே அதன் காப்புரிமை பெற்றதாக கூறி, அவர்களது முன் அனுமதியின்றி அப்பாடலைப் பயன் படுத்திய பலரிடம் இருந்தும் தொடர்ந்து நஷ்ட ஈடு வசூலித்து வருகிறது வார்னர் சேப்பல்.

பொதுச் சொத்துங்க...
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக சட்ட பள்ளி பேராசிரியர் ராபர்ட் ப்ரவுனிஸ், 'ஹேப்பி பர்த்டே டூ யூ பாடலை தனி நபர் யாரும் உரிமை கோர முடியாது. அதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை' எனத் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications