மனைவி, குழந்தையை கத்தியால் குத்திய தம்பியின் கையை துண்டாக்கிய அண்ணன்

Subscribe to Oneindia Tamil

மார்த்தாண்டம்: பாகப்பிரிவினை நடந்த போது உண்டான தகறாரில் அண்ணனின் மனைவி மற்றும் குழந்தையை கத்தியால் குத்திய தம்பியின் கையை வெட்டி துண்டாக்கினார் அண்ணன். இதனால், அப்பகுதியில் பரபரப்பி நிலவுகிறது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெரு ஆயிவிளையி வாழ்ந்து வருபவர் மணிகண்டன் (32). இவரது மனைவி வித்யா (26). இவர்களுக்கு ஒன்றரை வயதில் விஜயா என்ற மகள் உள்ளார். மணிகண்டன் தன் அண்ணன் அய்யப்பன், தம்பி முருகன் (28) மற்றும் பெற்றோர் ஆகியோருடன் ஒரே வீட் டில் வசித்து வருகிறார்.

ஏற்கனவே, மணிகண்டனின் பெற்றோருக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தில் உள்ள வீட்டை பங்கு பிரிப்பதில் பிரச்சினை இருந்தது. இது சம்பந்தமாக உண்டான பிரச்சினையில், சில மாதங்களுக்கு முன் முருகன், மணிகண்டனுக்கு சொந்தமான பசு மாட்டின் வாலை வெட்டியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, நேற்று இரவும் அவர்களுக்கிடையே சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டை கைகலப்பாக மாற, ஆத்திரம் அடைந்த முருகன், அண்ணி வித்யாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் வித்யாவுக்கு முதுகில் 3 இடங்களில் கத்தி குத்து விழுந்தது.

சம்பவத்தின் போது வித்யாவின் கையில் அவரது ஒன்றரை வயது மகள் விஜயாவும் இருந்ததால், அவருக்கும் கத்திக்குத்தில் காயம் ஏற்பட்டது. இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததைப் பார்த்த மணிகண்டன் கோபத்தில், வீட்டில் இருந்த அரிவாளால் முருகனை சரமாரியாக வெட்டினார். இதில் முருகனின் கை மணிகட்டு துண்டாக விழுந்தது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். உடனடியாக மணிகண்டன் தப்பி ஓடிவிட்டார். காயம்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த வித்யா, குழந்தை, முருகன் ஆகிய 3 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நடந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். தப்பியோடிய மணிகண்டனை போலீசார் இன்ரு காலை கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+