ஓசூரில் 3 ஏக்கர் நிலத்துக்காக பெற்ற தாயை கூலிப்படை வைத்து கொன்ற மகள் கைது
கிருஷ்ணகிரி: ஓசூரில் சொத்து பிரச்சனையில் பெற்ற தாயையே கூலிப்படை மூலம் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தஜிகூரை சேர்ந்தவர் பூ வியாபாரியான சஞ்சீவம்மா(60). கடந்த 14ம் தேதி இரவு அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சஞ்சீவம்மாவின் மகள் முனிரத்னாவிடம் விசாரித்தனர். விசாரணையில் தனது கணவர் வெங்கட்ராஜுடன் சேர்ந்து கூலிப்படை மூலம் தனது தாயை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து முனிரத்னா, வெங்கட்ராஜ், திருச்சிப்பள்ளியை சேர்ந்த ஜெகதீஷ், தொரப்பள்ளியை சேர்ந்த முனிராஜ், முருகேஷ், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
முனிரத்னா அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
எனக்கும், வெங்கட்ராஜுக்கும் திருமணமாகி ரூபா என்ற மகளும், சீனிவாசன் என்ற மகனும் உள்ளனர். எனது தாய்க்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை நானும், எனது கணவரும் கேட்டோம். அதற்கு எனது தாய் தர மறுத்து என்னை உதாசீனப்படுத்தினார். இதனால் எனது தாயை தீர்த்து கட்ட திட்டமிட்டோம். இதற்காக திருச்சிப்பள்ளியை சேர்ந்த ஜெகதீசை சந்தித்தோம். அதற்கு ஜெகதீஷ் ரூ. 1 லட்சம் கொடுங்கள், என் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. அதனால் நான் நேரடியாக இந்த கொலைக்கு போக மாட்டேன். எனது கூலிப்படையை வைத்து நான் கொன்று விடுகிறேன் என்றார். அதற்கு நானும் சம்மதித்து எனது கம்மலை அடகு வைத்து ரூ. 18 ஆயிரத்தை ஜெகதீசிடம் கொடுத்தேன்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முனிராஜ், முருகேஷ், சிவக்குமார் ஆகியோர் என்னை சந்தித்தினர். அவர்களை ஆனேக்கல்லுக்கு நானும், எனது கணவரும் அழைத்து சென்றோம். அங்கு பூ வியாபாரம் செய்த எனது தாயை காட்டி இவரைத்தான் நீங்கள் கொல்ல வேண்டும் என்று கூறினேன். இதையடுத்து முனிராஜ் உள்ளிட்ட 3 பேரும், ஒரு வாரமாக எனது தாய் செல்லும் பஸ், திரும்ப வரும் பஸ் ஆகியவற்றை கண்காணித்து அவர் தைல மரத்தோப்பில் வரும் நேரத்தை கணித்து கொண்டனர்.
ஓசூரில் 2 இரும்பு பைப்புகளையும், ஆனேக்கல்லில் ரூ. 200-க்கு ஒரு வீச்சரிவாளையும் அவர்கள் வாங்கினர். கடந்த 13ம் தேதி இரவு கொத்தஜிகூர் தைல மரத்தோப்பிற்கு வந்த அவர்கள் வீச்சரிவாள் மற்றும் இரும்பு பைப்புகளை பதுக்கி வைத்தனர். மறுநாள் 14ம் தேதி இரவு எனது தாய் பூ வியாபாரத்தை முடித்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது மறைந்திருந்த முனிராஜ், முருகேஷ், சிவக்குமார் ஆகியோர் வீச்சரிவாள், பைப்புகளுடன் வந்து எனது தாய் முன் நின்றனர். அவர்களில் முனிராஜும், முருகேசும் இரும்பு பைப்பால் எனது தாய் தலையில் அடிக்க அவர் கீழே விழுந்தார். அப்போது சிவக்குமார் வீச்சரிவாளால் எனது தாய் சஞ்சீவம்மாவின் கழுத்தில் வெட்டி கொன்றார். போலீசாரின் விசாரணையில் நாங்கள்வசமாக சிக்கி கொண்டோம் என்று அதில் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications