உதவிக்கு 5 அதிகாரிகள் குழு- உத்தர்காண்ட்டுக்கு அனுப்பினார் குஜராத் முதல்வர் மோடி!
அகமதாபாத்: பெருமழை வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோரின் கதி என்ன என்று தெரியாமல் தவித்து வருகிறது உத்தர்காண்ட் மாநிலம். அம்மாநிலத்தின் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில் குஜராத் மாநில செயலர் நிலையிலான 5 அதிகாரிகளை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தர்காண்ட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பேரழிவில் சிக்கியிருக்கும் உத்தர்காண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகளுக்கான உதவி தேவை எனில் நிச்சயம் உதவுவோம் என்று கூறியிருந்தார்.
மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், உத்தர்காண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுணாவிட வெள்ள சேத நிலைமை பற்றி கேட்டேன்..எந்த உதவி தேவைப்பட்டாலும் உதவ தயாராக இருக்கிறோம் என்றும் கூறினேன். அம்மாநிலத்தில் தவிக்கும் குஜராத் மக்களின் நிலைமை பற்றியும் கேட்டேன் என்று பதிவிட்டிருந்தார்.
நேற்றோ, உத்தர்காண்ட் மாநில வெள்ள சேதம் பற்றி பதிவிட்டதுடன் இந்த நேரத்தில் நாம் அனைவரும் அம்மாநில மக்களுக்கு உதவியாக இருப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் உத்தர்காண்ட் மாநிலத்தின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு செயலர் நிலையிலான 5 அதிகாரிகளைக் கொண்ட குழு அந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டிருக்கிறார் நரேந்திர மோடி!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications